Skip to main content
தலப்பாகட்டி பிரியாணி என எப்படி பெயர் வந்தது தெரியுமா? அந்த பிரியாணியோட சீக்ரெட் தெரிஞ்சிக்கணுமா?
சிறிய குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட திண்டுக்கல் தலைப்பாகட்டி கடை இன்று விரிவடைந்து பல கிளைகளாக, சென்னை, வத்லகுண்டு என பல இடங்களில் இயங்கி வருகிறது.
அதெல்லாம் சரி. ஏன் அந்த கடைக்கு தலைப்பாகட்டி பிரியாணி கடை என பெயர் வந்தது தெரியுமா? அதோடு அப்படியென்ன தான் அந்த கடை பிரியாணி ரகசியம்ன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?
1957 ஆண்டு நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்தவிலாஸ் பிரியாணி கடை என்ற பெயரில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்தார். 1972 இல் அவருடைய மறைவுக்குப் பின் அந்த கடைகளை அவருடைய மகன் நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, இன்று அவருடைய பெயரையே வைத்திருக்கிற அவருடைய பேரன் நாகசாமி என்பவர் தான் நிர்வகித்து வருகிறார்.
ஆரம்ப காலங்களில் அவரே தான் ஹோட்டலில் சமையலும் செய்து வந்தார். அந்த சமயங்களில் தலையில் அவருக்கு முடி மிகக் குறைவு என்பதற்காக தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வாராம். பின்னாட்களில் அதுவே அந்த ஹோட்டலின் அடையாளமாகிப் போய், தலைபாகட்டி கடை என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். திண்டுக்கல் தான் அவருடைய பூர்வீகம் என்பதால், திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி என்று அழைக்கப்படுகிறது.
இந்த திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியின் சிறப்பே சீரக சம்பா அரிசி தான். அதுவும் அவர்களுடைய சொந்த வயலில் விளைவிக்கப்பட்ட அரிசியே பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் மசாலாக்கள் அனைத்தும் உலக்கை கொண்டு நன்கு இடித்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்னும் அதே பழைய சுவை மாறாமல் இருப்பதற்காக இன்றும்கூட திண்டுக்கல்லில் இருந்து தான் அனைத்து மசாலாக்களும் மற்ற கிளைகளுக்குக் கொண்டுவரப்படுகிறதாம்.
திண்டுக்கல்லில் இந்த மசாலாக்களை கையால் இடித்து பேக் செய்வதற்காகவே 30 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் பிரியாணிக்குப் பயன்படுத்தப்படுகிற ஆடுகள் 8 முதல் 10 கிலோவுக்குள் இருப்பதாக மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்களாம். இதுதான் அந்த பிரியாணியின் ஸ்பெஷலாம்.
பிரியாணி மட்டுமல்லாமல் 300 வகை அசைவ உணவுகள் இங்கு தினசரி தயார் செய்யப்படுகின்றனவாம்.
திண்டுக்கல்லில் மூன்று கிளைகளும் சென்னையில் 23 கிளைகளும் இயங்கி வருகின்றன.
தற்போது கைகள் எதுவும் படாமல் காய்கறிகள் முதல் மசாலாக்கள் வரை அத்தனையும் கை படாமல் வெட்டவும் அரைக்கவும், மெஷின்களையே பயன்படுத்துகிறார்கள். இங்கு மட்டன் சுக்கா போன்ற பல உணவு வகைகள் கைகளில் படாமல் மெஷின்கள் மூலமாகவே தயார் செய்யப்படுகிறது.
இதுதான் இத்தனை நாள் தலைப்பாகட்டி பிரியாணிக்குள் ஒளிந்திருந்த ரகசியம்.
Popular posts from this blog
Comments