Skip to main content
அகர் மரம் :
அகர் மரம், மரங்களின் கடவுள் என்றும் வாசனை திரவியங்களின் அரசன் என்றும், பசுமை தங்கம் என்றும் 3000-ம் ஆண்டுகளாக உலக மக்களால் போற்றப்படுகிறது. அகில் சந்தனம் என்றும் அழைக்கப்படுகிறது.
அகர் மரம் சந்தன மரத்தைவிட பல மடங்கு விலை மதிப்பு வாய்ந்தது. இதற்கு காரணம் அகர் வாசனையை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது.
அகர் மரங்கள் வேகமாக வளர்ந்து பூ, விதைகளை 4 ஆண்டுகளிலேயே தரக்கூடியவை. அகரில் 16 க்கும் மேற்பட்ட இரகங்கள் உள்ளன. இவற்றில் பொதுவாக காணப்படும் இந்திய ரகம் அக்குலேரியா அகலோச்சா ஆகும். அகர்மரத்தின் ஆயுட்காலம் 40-45 ஆண்டுகள் ஆகும்.
அகர் மரம் காணப்படும் இடங்கள் :
அகர் மரம் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளிலும், இமயமலை அடிவார மலை காடுகளிலும் காணப்படுகிறது.
சந்தனம், தேக்கு, குமிழ், மலைவேம்பு, ஆகிய மரங்கள் வளரும் இடத்தில் அகர் மரம் வளரும்.
அகர் மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் :
அகர் மரம் மருந்தாகவும், வாசனை திரவியாகவும், சோப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் இதர அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும் மேலும் எல்லா இயற்கை மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.
அகர்வாசனை திரவியங்களின் வரலாறு :
அகர்வாசனை திரவியமானது பண்டை காலத்தில் எகிப்து நாட்டில் இருந்து ஆரம்பித்து பிறகு ரோமன் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தின் முதல் வேதியல் நிபுணரான சப்புதியே முதன் முதலில் அகர்மரத்தில் இருந்து வாசனை பொருட்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார்.
அகர் மரத்தின் சிறப்பு :
அகர்மரத்தின் வாசனை பொருட்களை எரிக்கும்போது உருவாகும் புகையில் இருந்து மிகவும் அற்புதமான வாசனை கிடைக்கிறது. இது யோகா, தியானம், போன்ற பயிற்சிகளில் மனதை ஒருமுகப்படுத்த பயன்படுகிறது.
அகர் எண்ணை உடலுக்கும், மனத்திற்கும் சுறு சுறுப்பையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.
அகர் மரத்தின் பயன்கள் :
அகர்மரம் வீட்டு வாசனை திரவியமாகவும் மற்றும் வீட்டு சுத்திகரிப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அகர் மரத்தின் இனிய மணம் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவ மற்றும் புத்த சமய வழிபாடுகளுக்கும், தியானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அகர் மரம் அலங்கார சிலைகள், மணிகள், தேனீர், வைன் (மதுபானம்) வழிபாட்டு திவரம் போன்றவைகளில் அகர்மரம் பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
சீன மருத்துவம், வியட்நாம் மருத்துவம், திபெத் மருத்துவம், அரோமா தெரபி, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
அகர் மரத்தின் மதிப்பு :
அரபு நாடுகள், சௌதி அரேபியா, ஹாங்காங், தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அகர் மரத்தினை இறக்குமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தரமான அகர் மரம் பச்சை எமரால்ட்களை விட அதிக மதிப்பு கொண்டது. கருப்பாகவும், முழுவதும் ரெசின் கொண்ட மரங்கள் பல ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டது.
Popular posts from this blog
Comments