Skip to main content
மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல்
காபாரதத்தில் கௌரவ பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த
அமைச்சராக தனது அண்ணன் திருதராஷ்டரரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமா வார்.அத்தகைய பெருமை மிக்க விதுரர் கூறிய பதினேழு வகையான மூடர்களைத்தான் கீழே பட்டியலிடப்பட்டு ள்ளது.
பதினேழு வகையான மூடர்கள்
1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்..
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன்
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்பவன்
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய் யாமல் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டிருப்பவன்.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்).
8) பலமில்லாதவனாக இருந்துகொண்டு, பலமுள்ளவ னோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்லது பொருளை யோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன் அதாவது பிறர் மனைவியரை அடைபவன்
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிரு ப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித்தற்பெருமை பேசுபவ ன்.
17) எதிரிகளிடம் சரண்டைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.
Popular posts from this blog
Comments