Skip to main content
#அறிவோம்
தன் காலடியைத் தரையில் வைக்காத பறவை ‘ஹரியாஸ்’ என்பதாகும்.
பார்க்க வயலின் மாதிரி இருப்பதால் இதனை 'வயலின் மீன்' என்று கூப்பிடுவார்கள். எதிரிகளிடம் சிக்கிக் கொண்டால், சுறுசுறு என்று கரண்ட் மாதிரி ஒரு கதிரை எதிரிகளோட உடம்பில் பாய்ச்சி விட்டு தப்பித்துவிடும்.
ஆண் புலியின் எடை 200 கிலோ முதல் 320 கிலோ வரை இருக்கும்.
சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1985.
சுவிட்சர்லாந்தில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன்.
அரிஸ்டாட்டில் மிகச் சிறந்த தத்துவ ஞானி. கிரேக்க நாட்டவர். ப்ளேட்டோவின் மாணவர். அலெக்ஸ்சான்டரின் ஆசிரியர். அரசியல் அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
முதலையின் கண்ணில் இருந்து சில சமயம் நீர் வடியும். இதனை அழுகை – கண்ணீர் என நினைக்கிறோம். அது சரியல்ல. முதலை உணவை அப்படியே விழுங்கும். அதனை செரிக்க வைக்க வயிற்றில் ஒரு திரவம் சுரக்கும். அப்படி சுரக்கும் நீர் சற்று அதிகமாகிவிட்டால், அந்த அதிகப்படி நீர்தான் கண்வழியே வெளியேறும்.
நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம்.
முதலைக்கு மட்டும் எத்தனை முறை பல் விழுந்தாலும் மறுபடியும் முளைத்து விடும்.
வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்கு பற்கள் வயிற்றில் உள்ளன.
'தென்னிந்தியாவின் வெனிஸ்' என்று அழைக்கப்படுவது ஆழப்புழை நகரம்.
Popular posts from this blog
Comments