Skip to main content
உலகில் இதுவரை இறந்தவர்களின் ஆவிகள் அத்தனையும் உலவும் இடம் இதுதானாம்....
உலகில் எல்லா கடவுளுக்கும் கோயில்கள் உண்டு. ஏன் உன்னை மக்கள் வழிபட மாட்டார்கள் என்று சிவனால் சாபம் வழங்கப்பட்ட பிரம்மனுக்குக் கூட ஓரிரு கோயில்கள் இருப்பதாக அறிகிறோம்.
ஆனால் நம்முடைய உயிரைக் குடிக்கும் கடவுளாகக் கருதப்படுகிற எம தர்மனுக்கு கோயில்கள் இருந்ததாகவோ மக்கள் வழிபட்டதாகவோ நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் பெயரைக் காதால் கேட்டாலே காத தூரம் ஓடும் எம தர்மராஜாவுக்கும் நம் நாட்டிலேயே கோயில் கட்டியிருக்கிறார்கள் தெரியுமா?
ஆம். அதுவும் இந்தியாவில் தான் அப்படியொரு கோயில் இருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் பிரம்மூர் என்னும் இடத்தில் உள்ள சௌராஷி கோயிலுக்குள் தான் எம தர்மனுக்கும் கோயில் இருக்கிறது.
இந்த பிரம்மூர் பிரம்மபுரம் என்ற பெயராலும் பரவலாக அழைக்கப்படுகிறது.
சம்பாவில் இருந்து தென் கிழக்கில் 40 மைல் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
இது புதில் பள்ளத்தாக்கில் இருந்து 7000 அடி உயரத்தில் உள்ளது.
மதத்தின் அருமையையும் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்துவதற்காக, 84 பேர் சேர்ந்து இந்த கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். இது மாறவர்மனால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்த கோயில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
எமதர்மன் மட்டுமல்லாமல், லக்ஷனா தேவி, சிவன், கணபதி, நரசிம்மர் ஆகியோருக்கும் இக்குாவிலுக்குள் பிரகாரங்கள் உண்டு.
இதன் நுழைவாயிலில் தர்மேஷ்வர மஹாதேவர் வீற்றிருக்கிறார். உலகத்தில் உள்ள மொத்த வாழும் ஜீவராசிகளின் ஆவிகளும் இந்த இடத்தில் தான் அடங்குகிறது என்று நம்பப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பது அந்த ஆவிகளுக்கு மட்டுமே தெரியும்.
Popular posts from this blog
Comments