திருமணம் என்ற சொல்லின் விளக்கம்: ============================= திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு. தாலி: ===== தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.பின்னாளில் அதனைப்பொன்னால் செய்து பொற்றாலி க்கினர். அருகு-மணை எடுத்தல்: ================== தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவர்.முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள்மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர். "அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும்.மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும். பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர். ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும். முகூர்த்தக்கால் நடுதல்: ======================== முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். அரசாணிக்கால் நடுதல்: ======================== மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும். மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்: ============================ கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும். திருமண வேள்வி: ============== அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும். பாலிகை இடுதல்: ============= நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்: ========================== இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள். அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும். சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்: ============================ மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும். வெற்றிலைபாக்கு மாற்றுதல்: ======================= மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின் மகனுக்கு என இருவிட்டாரும் கூறி ஏ ழு பாக்கு கள் ஏழு வெற்றிலைகள் வைத்து மாற்றுதல் எழுவகை பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உருதியளிப்பதாகும் . * உறவின் முறை விளக்கம்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~ * கணவன், கொழுநன் ~~~~~~~~~~~~~~~~~~ கண் அவன் பெண்ணுக்கு கண் போன்றவள் என்பதாகும் .நம்மை நல்வழிசெல்லும் கண்ணைபோல் பெண்ணை நல்வழி படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவள் கணவன் என்பதாகும் * கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும் .கோடி படர்ந்து உயர்வதற்கு கொழு கொம்பு எப்படி இன்றி அமையாததோஅதே போல் பெண்மைக்குப்து பாதுகாவளுக்குரியஆண்மகன் என்பதாகும் * மனைவி ~~~~~~~~ மனைவி துணைவி இல்லாள் இச்சொற்கள் இல்லநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனாவாகும் மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்

Comments

Popular posts from this blog

அகர் மரம் : அகர் மரம், மரங்களின் கடவுள் என்றும் வாசனை திரவியங்களின் அரசன் என்றும், பசுமை தங்கம் என்றும் 3000-ம் ஆண்டுகளாக உலக மக்களால் போற்றப்படுகிறது. அகில் சந்தனம் என்றும் அழைக்கப்படுகிறது. அகர் மரம் சந்தன மரத்தைவிட பல மடங்கு விலை மதிப்பு வாய்ந்தது. இதற்கு காரணம் அகர் வாசனையை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது. அகர் மரங்கள் வேகமாக வளர்ந்து பூ, விதைகளை 4 ஆண்டுகளிலேயே தரக்கூடியவை. அகரில் 16 க்கும் மேற்பட்ட இரகங்கள் உள்ளன. இவற்றில் பொதுவாக காணப்படும் இந்திய ரகம் அக்குலேரியா அகலோச்சா ஆகும். அகர்மரத்தின் ஆயுட்காலம் 40-45 ஆண்டுகள் ஆகும். அகர் மரம் காணப்படும் இடங்கள் : அகர் மரம் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளிலும், இமயமலை அடிவார மலை காடுகளிலும் காணப்படுகிறது. சந்தனம், தேக்கு, குமிழ், மலைவேம்பு, ஆகிய மரங்கள் வளரும் இடத்தில் அகர் மரம் வளரும். அகர் மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் : அகர் மரம் மருந்தாகவும், வாசனை திரவியாகவும், சோப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் இதர அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும் மேலும் எல்லா இயற்கை மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. அகர்வாசனை திரவியங்களின் வரலாறு : அகர்வாசனை திரவியமானது பண்டை காலத்தில் எகிப்து நாட்டில் இருந்து ஆரம்பித்து பிறகு ரோமன் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தின் முதல் வேதியல் நிபுணரான சப்புதியே முதன் முதலில் அகர்மரத்தில் இருந்து வாசனை பொருட்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார். அகர் மரத்தின் சிறப்பு : அகர்மரத்தின் வாசனை பொருட்களை எரிக்கும்போது உருவாகும் புகையில் இருந்து மிகவும் அற்புதமான வாசனை கிடைக்கிறது. இது யோகா, தியானம், போன்ற பயிற்சிகளில் மனதை ஒருமுகப்படுத்த பயன்படுகிறது. அகர் எண்ணை உடலுக்கும், மனத்திற்கும் சுறு சுறுப்பையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. அகர் மரத்தின் பயன்கள் : அகர்மரம் வீட்டு வாசனை திரவியமாகவும் மற்றும் வீட்டு சுத்திகரிப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. அகர் மரத்தின் இனிய மணம் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவ மற்றும் புத்த சமய வழிபாடுகளுக்கும், தியானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அகர் மரம் அலங்கார சிலைகள், மணிகள், தேனீர், வைன் (மதுபானம்) வழிபாட்டு திவரம் போன்றவைகளில் அகர்மரம் பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவம், வியட்நாம் மருத்துவம், திபெத் மருத்துவம், அரோமா தெரபி, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அகர் மரத்தின் மதிப்பு : அரபு நாடுகள், சௌதி அரேபியா, ஹாங்காங், தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அகர் மரத்தினை இறக்குமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான அகர் மரம் பச்சை எமரால்ட்களை விட அதிக மதிப்பு கொண்டது. கருப்பாகவும், முழுவதும் ரெசின் கொண்ட மரங்கள் பல ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டது.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து  பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவுபரிமாற வேண்டும். விருந்துபடைக்கிறவர்கள், விருந்தினர்கள்சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிடவேண்டும் என்பதே இதன் உண்மையானஅர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்குமுந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது

தலப்பாகட்டி பிரியாணி என எப்படி பெயர் வந்தது தெரியுமா? அந்த பிரியாணியோட சீக்ரெட் தெரிஞ்சிக்கணுமா? சிறிய குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட திண்டுக்கல் தலைப்பாகட்டி கடை இன்று விரிவடைந்து பல கிளைகளாக, சென்னை, வத்லகுண்டு என பல இடங்களில் இயங்கி வருகிறது. அதெல்லாம் சரி. ஏன் அந்த கடைக்கு தலைப்பாகட்டி பிரியாணி கடை என பெயர் வந்தது தெரியுமா? அதோடு அப்படியென்ன தான் அந்த கடை பிரியாணி ரகசியம்ன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? 1957 ஆண்டு நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்தவிலாஸ் பிரியாணி கடை என்ற பெயரில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்தார். 1972 இல் அவருடைய மறைவுக்குப் பின் அந்த கடைகளை அவருடைய மகன் நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, இன்று அவருடைய பெயரையே வைத்திருக்கிற அவருடைய பேரன் நாகசாமி என்பவர் தான் நிர்வகித்து வருகிறார். ஆரம்ப காலங்களில் அவரே தான் ஹோட்டலில் சமையலும் செய்து வந்தார். அந்த சமயங்களில் தலையில் அவருக்கு முடி மிகக் குறைவு என்பதற்காக தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வாராம். பின்னாட்களில் அதுவே அந்த ஹோட்டலின் அடையாளமாகிப் போய், தலைபாகட்டி கடை என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். திண்டுக்கல் தான் அவருடைய பூர்வீகம் என்பதால், திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி என்று அழைக்கப்படுகிறது. இந்த திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியின் சிறப்பே சீரக சம்பா அரிசி தான். அதுவும் அவர்களுடைய சொந்த வயலில் விளைவிக்கப்பட்ட அரிசியே பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மசாலாக்கள் அனைத்தும் உலக்கை கொண்டு நன்கு இடித்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்னும் அதே பழைய சுவை மாறாமல் இருப்பதற்காக இன்றும்கூட திண்டுக்கல்லில் இருந்து தான் அனைத்து மசாலாக்களும் மற்ற கிளைகளுக்குக் கொண்டுவரப்படுகிறதாம். திண்டுக்கல்லில் இந்த மசாலாக்களை கையால் இடித்து பேக் செய்வதற்காகவே 30 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் பிரியாணிக்குப் பயன்படுத்தப்படுகிற ஆடுகள் 8 முதல் 10 கிலோவுக்குள் இருப்பதாக மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்களாம். இதுதான் அந்த பிரியாணியின் ஸ்பெஷலாம். பிரியாணி மட்டுமல்லாமல் 300 வகை அசைவ உணவுகள் இங்கு தினசரி தயார் செய்யப்படுகின்றனவாம். திண்டுக்கல்லில் மூன்று கிளைகளும் சென்னையில் 23 கிளைகளும் இயங்கி வருகின்றன. தற்போது கைகள் எதுவும் படாமல் காய்கறிகள் முதல் மசாலாக்கள் வரை அத்தனையும் கை படாமல் வெட்டவும் அரைக்கவும், மெஷின்களையே பயன்படுத்துகிறார்கள். இங்கு மட்டன் சுக்கா போன்ற பல உணவு வகைகள் கைகளில் படாமல் மெஷின்கள் மூலமாகவே தயார் செய்யப்படுகிறது. இதுதான் இத்தனை நாள் தலைப்பாகட்டி பிரியாணிக்குள் ஒளிந்திருந்த ரகசியம்.