Posts
Showing posts from February, 2018
#பெரியார்பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கை, பெண்விடுதலை, சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கையைப் எதிர்த்துப் போராடிய பெரியாரின் ஆரம்ப வாழ்க்கை :தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு முடித்துகொண்ட தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவருடைய 19 வது வயதில், 13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். 1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர், இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார். காசிக்கு பயணம் :காசிக்கு சென்ற பெரியார் அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறுக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. ஆரம்பகால அரசியல் வாழ்க்கை :இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். வைக்கம் போராட்டம் (1924-1925) :கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும், கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டத்தில், தமிழகத்தின் சார்பாக பெரியார் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியதால் சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் வைக்கம் வீரர் என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு :1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதால் ஈடுபட்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு: திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதனை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். இறப்பு: பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கவைத்தவர், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார். தமிழக அரசு பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தைபெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
காலை உணவு :🍚 காலை உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 10 மணிக்கு மேல் காலை உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.🍚 காலை உணவு என்பது, அந்த நாளைத் தொடங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது. காலை உணவு, மூளைக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உடலின் இயக்கத்துக்கு உதவுகிறது. 🍚 அவசரமாகக் கிளம்பும் சூழலில், காலை உணவைப் பலரும் தவிர்ப்பார்கள். இப்படித் தவிர்ப்பதால், அவர்களுக்கு தலைவலி, செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.🍚 காலை உணவைத் தவிர்ப்பவர்கள், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.🍚 காலை உணவில் இருக்க வேண்டிய உணவு வகைகள் தோசை, சப்பாத்தி, பொங்கல், காய்கறி உப்புமா, பூரி.மிட் மார்னிங் :🍚 காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணி நேரமாகும். இந்த நேரத்தில் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். 🍚 டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகப் பருகலாம். மதிய உணவு :🍚 மதிய உணவை 12 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 3 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.🍚 மதிய உணவுக்கும், காலை உணவுக்கும் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாகப் பராமரிக்கப்படும். இதனால் அதிகப் பசி மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.🍚 சரியான நேரத்துக்குச் சாப்பிட்டால் வாயுக்கோளாறு, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.🍚 மதிய உணவில் இருக்க வேண்டிய உணவுகள் கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவம், அரிசி சாதம், சாம்பார், கூட்டு.மாலை ஸ்நாக்ஸ் :🍚 மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.இரவு உணவு : 🍚 இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.🍚 இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொப்பை, உடல்பருமன், செரிமானப் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.🍚 சாப்பிட்டவுடன் தூங்கினால், உணவின் கலோரிகள் ஆற்றலாக மாறாமல், உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும்.🍚 இரவு உணவில் இருக்க வேண்டியவை இட்லி, இடியாப்பம், புட்டு, சப்பாத்தி, தோசை வகைகள்.
- Get link
- X
- Other Apps
அகர் மரம் : அகர் மரம், மரங்களின் கடவுள் என்றும் வாசனை திரவியங்களின் அரசன் என்றும், பசுமை தங்கம் என்றும் 3000-ம் ஆண்டுகளாக உலக மக்களால் போற்றப்படுகிறது. அகில் சந்தனம் என்றும் அழைக்கப்படுகிறது. அகர் மரம் சந்தன மரத்தைவிட பல மடங்கு விலை மதிப்பு வாய்ந்தது. இதற்கு காரணம் அகர் வாசனையை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது. அகர் மரங்கள் வேகமாக வளர்ந்து பூ, விதைகளை 4 ஆண்டுகளிலேயே தரக்கூடியவை. அகரில் 16 க்கும் மேற்பட்ட இரகங்கள் உள்ளன. இவற்றில் பொதுவாக காணப்படும் இந்திய ரகம் அக்குலேரியா அகலோச்சா ஆகும். அகர்மரத்தின் ஆயுட்காலம் 40-45 ஆண்டுகள் ஆகும். அகர் மரம் காணப்படும் இடங்கள் : அகர் மரம் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளிலும், இமயமலை அடிவார மலை காடுகளிலும் காணப்படுகிறது. சந்தனம், தேக்கு, குமிழ், மலைவேம்பு, ஆகிய மரங்கள் வளரும் இடத்தில் அகர் மரம் வளரும். அகர் மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் : அகர் மரம் மருந்தாகவும், வாசனை திரவியாகவும், சோப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் இதர அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும் மேலும் எல்லா இயற்கை மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. அகர்வாசனை திரவியங்களின் வரலாறு : அகர்வாசனை திரவியமானது பண்டை காலத்தில் எகிப்து நாட்டில் இருந்து ஆரம்பித்து பிறகு ரோமன் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தின் முதல் வேதியல் நிபுணரான சப்புதியே முதன் முதலில் அகர்மரத்தில் இருந்து வாசனை பொருட்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார். அகர் மரத்தின் சிறப்பு : அகர்மரத்தின் வாசனை பொருட்களை எரிக்கும்போது உருவாகும் புகையில் இருந்து மிகவும் அற்புதமான வாசனை கிடைக்கிறது. இது யோகா, தியானம், போன்ற பயிற்சிகளில் மனதை ஒருமுகப்படுத்த பயன்படுகிறது. அகர் எண்ணை உடலுக்கும், மனத்திற்கும் சுறு சுறுப்பையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. அகர் மரத்தின் பயன்கள் : அகர்மரம் வீட்டு வாசனை திரவியமாகவும் மற்றும் வீட்டு சுத்திகரிப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. அகர் மரத்தின் இனிய மணம் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவ மற்றும் புத்த சமய வழிபாடுகளுக்கும், தியானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அகர் மரம் அலங்கார சிலைகள், மணிகள், தேனீர், வைன் (மதுபானம்) வழிபாட்டு திவரம் போன்றவைகளில் அகர்மரம் பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவம், வியட்நாம் மருத்துவம், திபெத் மருத்துவம், அரோமா தெரபி, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அகர் மரத்தின் மதிப்பு : அரபு நாடுகள், சௌதி அரேபியா, ஹாங்காங், தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அகர் மரத்தினை இறக்குமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான அகர் மரம் பச்சை எமரால்ட்களை விட அதிக மதிப்பு கொண்டது. கருப்பாகவும், முழுவதும் ரெசின் கொண்ட மரங்கள் பல ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டது.
- Get link
- X
- Other Apps
இதயத்தை பற்றி சில தகவல்கள் !! 💖 சராசரியான இதயம் ஒரு வயது வந்தவரின் கைப்பிடி அளவு இருக்கும். The average heart is in the size of an adult person. 💖 உடலில் கடுமையாக உழைக்கும் தசைகள் உங்கள் இதயத்தில் தான் உள்ளது. The hardest-working muscle in your body is in your heart. 💖 நமது இதயம் ஒரு நாளைக்கு சுமார் 115,000 முறை துடிக்கிறது. Our heart beats about 115,000 times a day. 💖 இதயம் உடலில் இருந்து துண்டிக்கப்பட்டாலும் கூட துடிக்கும். Heart continue its beating even when it′s disconnected from the body. 💖 பாலூட்டிகளில் திமிங்கலத்திற்கு தான் மிகப் பெரிய இதயம் உள்ளது. Whales have the largest heart of any mammal. 💖 பெண்ணின் இதயம் ஆணின் இதயத்தை விட சற்று வேகமாக துடிக்கும். Women′s heart beats slightly faster than man′s heart. 💖 ஒரு பெண்ணின் இதயம் எட்டு அவுன்ஸ் எடையுள்ளதாகவும், ஒரு ஆணின் இதயம் பத்து அவுன்ஸ் எடையுடன் இருக்கும். An woman′s heart weighs about eight ounces, a man′s about ten ounces. 💖 கருத்தரித்து நான்கு வாரங்களுக்கு பிறகு இதயம் துடிக்க தொடங்குகிறது. The heart begins beating at four weeks after conception. 💖 ஒரு நபரின் வாழ்க்கையில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை இதயம் துடிக்கிறது. The heart beat over 3 billion times averagely in a person′s life. 💖 முதல் இதய வல்லுநர்கள் முதலாம் உலகப் போருக்குப் பிறகு வெளிவந்தனர். The first heart specialists emerged after World War I.
- Get link
- X
- Other Apps