#தெரிந்து_கொள்வோம் !!🌿 பிரேசில் நாடு ஒரு மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.Brazil country is named after a tree.🌿 ஒரு மரத்தின் வயதை அதன் வளையங்களால் கணக்கிடுவதற்கான விஞ்ஞானமே டென்ட்ரோக்ரோனாலஜி ஆகும்.Dendrochronology is the science of calculating a tree′s age by its rings.🌿 வாழை என்பது அரபு மொழியில் விரல்களுக்கு வழங்கப்படும் ஒரு சொல்லாகும்.Banana is an Arabic word for fingers.🌿 அமேசான் மழைக்காட்டில் தான் உலகின் 20 சதவித பிராணவாயு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.More than 20 percent of the world oxygen is produced in the Amazon Rainforest.🌿 கேரட் இரண்டு ஆண்டுகள் வாழும் தாவரம் ஆகும்.Carrot is biennial plant.🌿 மரங்கள் பூமியில் அதிகமாக வாழும் உயிரினமாகும்.Trees are the longest-living organisms on earth.🌿 விண்வெளி விண்கலத்திற்குள் வளர்ந்த முதல் தாவரம் உருளைக்கிழங்கு ஆகும்.Potato is the first plant that was successfully grown inside the space shuttle.🌿 மரம் ஒரு வருடத்திற்கு 48 பவுண்டு கார்பன் டையாக்சைடை உறிஞ்சுகிறது.A tree absorb 48 pounds of carbon dioxide per year.🌿 தேங்காய் மரத்தின் பழம் தாவரவியலில் ட்ருப் என அழைக்கப்படுகிறது.Fruit of coconut tree is botanically known as drupe.🌿 உலகிலேயே ஆப்பிள்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக சீனா உள்ளது.China is the greatest producer of apples in the world.


Comments

Popular posts from this blog

அகர் மரம் : அகர் மரம், மரங்களின் கடவுள் என்றும் வாசனை திரவியங்களின் அரசன் என்றும், பசுமை தங்கம் என்றும் 3000-ம் ஆண்டுகளாக உலக மக்களால் போற்றப்படுகிறது. அகில் சந்தனம் என்றும் அழைக்கப்படுகிறது. அகர் மரம் சந்தன மரத்தைவிட பல மடங்கு விலை மதிப்பு வாய்ந்தது. இதற்கு காரணம் அகர் வாசனையை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது. அகர் மரங்கள் வேகமாக வளர்ந்து பூ, விதைகளை 4 ஆண்டுகளிலேயே தரக்கூடியவை. அகரில் 16 க்கும் மேற்பட்ட இரகங்கள் உள்ளன. இவற்றில் பொதுவாக காணப்படும் இந்திய ரகம் அக்குலேரியா அகலோச்சா ஆகும். அகர்மரத்தின் ஆயுட்காலம் 40-45 ஆண்டுகள் ஆகும். அகர் மரம் காணப்படும் இடங்கள் : அகர் மரம் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளிலும், இமயமலை அடிவார மலை காடுகளிலும் காணப்படுகிறது. சந்தனம், தேக்கு, குமிழ், மலைவேம்பு, ஆகிய மரங்கள் வளரும் இடத்தில் அகர் மரம் வளரும். அகர் மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் : அகர் மரம் மருந்தாகவும், வாசனை திரவியாகவும், சோப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் இதர அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும் மேலும் எல்லா இயற்கை மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. அகர்வாசனை திரவியங்களின் வரலாறு : அகர்வாசனை திரவியமானது பண்டை காலத்தில் எகிப்து நாட்டில் இருந்து ஆரம்பித்து பிறகு ரோமன் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தின் முதல் வேதியல் நிபுணரான சப்புதியே முதன் முதலில் அகர்மரத்தில் இருந்து வாசனை பொருட்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார். அகர் மரத்தின் சிறப்பு : அகர்மரத்தின் வாசனை பொருட்களை எரிக்கும்போது உருவாகும் புகையில் இருந்து மிகவும் அற்புதமான வாசனை கிடைக்கிறது. இது யோகா, தியானம், போன்ற பயிற்சிகளில் மனதை ஒருமுகப்படுத்த பயன்படுகிறது. அகர் எண்ணை உடலுக்கும், மனத்திற்கும் சுறு சுறுப்பையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. அகர் மரத்தின் பயன்கள் : அகர்மரம் வீட்டு வாசனை திரவியமாகவும் மற்றும் வீட்டு சுத்திகரிப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. அகர் மரத்தின் இனிய மணம் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவ மற்றும் புத்த சமய வழிபாடுகளுக்கும், தியானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அகர் மரம் அலங்கார சிலைகள், மணிகள், தேனீர், வைன் (மதுபானம்) வழிபாட்டு திவரம் போன்றவைகளில் அகர்மரம் பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவம், வியட்நாம் மருத்துவம், திபெத் மருத்துவம், அரோமா தெரபி, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அகர் மரத்தின் மதிப்பு : அரபு நாடுகள், சௌதி அரேபியா, ஹாங்காங், தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அகர் மரத்தினை இறக்குமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான அகர் மரம் பச்சை எமரால்ட்களை விட அதிக மதிப்பு கொண்டது. கருப்பாகவும், முழுவதும் ரெசின் கொண்ட மரங்கள் பல ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டது.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து  பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவுபரிமாற வேண்டும். விருந்துபடைக்கிறவர்கள், விருந்தினர்கள்சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிடவேண்டும் என்பதே இதன் உண்மையானஅர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்குமுந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது

தலப்பாகட்டி பிரியாணி என எப்படி பெயர் வந்தது தெரியுமா? அந்த பிரியாணியோட சீக்ரெட் தெரிஞ்சிக்கணுமா? சிறிய குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட திண்டுக்கல் தலைப்பாகட்டி கடை இன்று விரிவடைந்து பல கிளைகளாக, சென்னை, வத்லகுண்டு என பல இடங்களில் இயங்கி வருகிறது. அதெல்லாம் சரி. ஏன் அந்த கடைக்கு தலைப்பாகட்டி பிரியாணி கடை என பெயர் வந்தது தெரியுமா? அதோடு அப்படியென்ன தான் அந்த கடை பிரியாணி ரகசியம்ன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? 1957 ஆண்டு நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்தவிலாஸ் பிரியாணி கடை என்ற பெயரில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்தார். 1972 இல் அவருடைய மறைவுக்குப் பின் அந்த கடைகளை அவருடைய மகன் நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, இன்று அவருடைய பெயரையே வைத்திருக்கிற அவருடைய பேரன் நாகசாமி என்பவர் தான் நிர்வகித்து வருகிறார். ஆரம்ப காலங்களில் அவரே தான் ஹோட்டலில் சமையலும் செய்து வந்தார். அந்த சமயங்களில் தலையில் அவருக்கு முடி மிகக் குறைவு என்பதற்காக தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வாராம். பின்னாட்களில் அதுவே அந்த ஹோட்டலின் அடையாளமாகிப் போய், தலைபாகட்டி கடை என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். திண்டுக்கல் தான் அவருடைய பூர்வீகம் என்பதால், திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி என்று அழைக்கப்படுகிறது. இந்த திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியின் சிறப்பே சீரக சம்பா அரிசி தான். அதுவும் அவர்களுடைய சொந்த வயலில் விளைவிக்கப்பட்ட அரிசியே பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மசாலாக்கள் அனைத்தும் உலக்கை கொண்டு நன்கு இடித்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்னும் அதே பழைய சுவை மாறாமல் இருப்பதற்காக இன்றும்கூட திண்டுக்கல்லில் இருந்து தான் அனைத்து மசாலாக்களும் மற்ற கிளைகளுக்குக் கொண்டுவரப்படுகிறதாம். திண்டுக்கல்லில் இந்த மசாலாக்களை கையால் இடித்து பேக் செய்வதற்காகவே 30 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் பிரியாணிக்குப் பயன்படுத்தப்படுகிற ஆடுகள் 8 முதல் 10 கிலோவுக்குள் இருப்பதாக மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்களாம். இதுதான் அந்த பிரியாணியின் ஸ்பெஷலாம். பிரியாணி மட்டுமல்லாமல் 300 வகை அசைவ உணவுகள் இங்கு தினசரி தயார் செய்யப்படுகின்றனவாம். திண்டுக்கல்லில் மூன்று கிளைகளும் சென்னையில் 23 கிளைகளும் இயங்கி வருகின்றன. தற்போது கைகள் எதுவும் படாமல் காய்கறிகள் முதல் மசாலாக்கள் வரை அத்தனையும் கை படாமல் வெட்டவும் அரைக்கவும், மெஷின்களையே பயன்படுத்துகிறார்கள். இங்கு மட்டன் சுக்கா போன்ற பல உணவு வகைகள் கைகளில் படாமல் மெஷின்கள் மூலமாகவே தயார் செய்யப்படுகிறது. இதுதான் இத்தனை நாள் தலைப்பாகட்டி பிரியாணிக்குள் ஒளிந்திருந்த ரகசியம்.