Skip to main content
#பெரியார்பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கை, பெண்விடுதலை, சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கையைப் எதிர்த்துப் போராடிய பெரியாரின் ஆரம்ப வாழ்க்கை :தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு முடித்துகொண்ட தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவருடைய 19 வது வயதில், 13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். 1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர், இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார். காசிக்கு பயணம் :காசிக்கு சென்ற பெரியார் அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறுக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. ஆரம்பகால அரசியல் வாழ்க்கை :இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். வைக்கம் போராட்டம் (1924-1925) :கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும், கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டத்தில், தமிழகத்தின் சார்பாக பெரியார் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியதால் சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் வைக்கம் வீரர் என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு :1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதால் ஈடுபட்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு: திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதனை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். இறப்பு: பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கவைத்தவர், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார். தமிழக அரசு பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தைபெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
Popular posts from this blog
Comments