Posts
Showing posts from January, 2018
திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் அறியாமை இருள் அகலவும், மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும் பாடுபட்டார். 1924ல் கேரளத்தில் வைக்கம் மகா தேவர் கோவில் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகம் நடத்தி வெற்றி பெற்றார். இதனால் வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார் தந்தை பெரியார்
- Get link
- X
- Other Apps
#இயற்கை_365 தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் அடர்சிவப்பு நிறத்தைக் கொண்ட பீட்ரூட்டின் தாவரப் பெயர் Beta vulgaris. தோன்றிய இடம்: ஐரோப்பா. பீட்ரூட் வேரிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காயாகும். இதன் கிழங்கு, இலை, வேர் என அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை. பீட்ரூட்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, beet sugar என்ற சர்க்கரை, புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் C, A, B ஆகியன உள்ளன
- Get link
- X
- Other Apps
17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இருக்கும் தலம் - ஆனைமலை, கோயம்புத்தூர்.
- Get link
- X
- Other Apps
கண்களை ஏன் சிமிட்டுகிறோம் ! கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும். இச்செய்கை சுமார் 400 மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது. இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும். கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம். சராசரியாக ஒரு நாளைக்கு நாம் 15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை. ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள். விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை.
- Get link
- X
- Other Apps
பந்திக்கு முந்து படைக்கு பிந்து  பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவுபரிமாற வேண்டும். விருந்துபடைக்கிறவர்கள், விருந்தினர்கள்சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிடவேண்டும் என்பதே இதன் உண்மையானஅர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்குமுந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது
- Get link
- X
- Other Apps
#கரூர் மாவட்டம் #அமராவதி ஆற்றில் பழமையான கிரேக்க நாணயம் கண்டுபிடிப்பு!
- Get link
- X
- Other Apps
#தெரியுமா? ஜோர்டான் நாட்டில், ஒரு நகரில் ஒரு பழைய சுவர்..... 9800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகின் பழைமையான சுவர் இதுவே.
- Get link
- X
- Other Apps
1948 :: Nathuram Godse , Accused In Murder of Mahatma Gandhi , Produced In Court
- Get link
- X
- Other Apps
தலப்பாகட்டி பிரியாணி என எப்படி பெயர் வந்தது தெரியுமா? அந்த பிரியாணியோட சீக்ரெட் தெரிஞ்சிக்கணுமா? சிறிய குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட திண்டுக்கல் தலைப்பாகட்டி கடை இன்று விரிவடைந்து பல கிளைகளாக, சென்னை, வத்லகுண்டு என பல இடங்களில் இயங்கி வருகிறது. அதெல்லாம் சரி. ஏன் அந்த கடைக்கு தலைப்பாகட்டி பிரியாணி கடை என பெயர் வந்தது தெரியுமா? அதோடு அப்படியென்ன தான் அந்த கடை பிரியாணி ரகசியம்ன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? 1957 ஆண்டு நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்தவிலாஸ் பிரியாணி கடை என்ற பெயரில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்தார். 1972 இல் அவருடைய மறைவுக்குப் பின் அந்த கடைகளை அவருடைய மகன் நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, இன்று அவருடைய பெயரையே வைத்திருக்கிற அவருடைய பேரன் நாகசாமி என்பவர் தான் நிர்வகித்து வருகிறார். ஆரம்ப காலங்களில் அவரே தான் ஹோட்டலில் சமையலும் செய்து வந்தார். அந்த சமயங்களில் தலையில் அவருக்கு முடி மிகக் குறைவு என்பதற்காக தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வாராம். பின்னாட்களில் அதுவே அந்த ஹோட்டலின் அடையாளமாகிப் போய், தலைபாகட்டி கடை என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். திண்டுக்கல் தான் அவருடைய பூர்வீகம் என்பதால், திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி என்று அழைக்கப்படுகிறது. இந்த திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியின் சிறப்பே சீரக சம்பா அரிசி தான். அதுவும் அவர்களுடைய சொந்த வயலில் விளைவிக்கப்பட்ட அரிசியே பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மசாலாக்கள் அனைத்தும் உலக்கை கொண்டு நன்கு இடித்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்னும் அதே பழைய சுவை மாறாமல் இருப்பதற்காக இன்றும்கூட திண்டுக்கல்லில் இருந்து தான் அனைத்து மசாலாக்களும் மற்ற கிளைகளுக்குக் கொண்டுவரப்படுகிறதாம். திண்டுக்கல்லில் இந்த மசாலாக்களை கையால் இடித்து பேக் செய்வதற்காகவே 30 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் பிரியாணிக்குப் பயன்படுத்தப்படுகிற ஆடுகள் 8 முதல் 10 கிலோவுக்குள் இருப்பதாக மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்களாம். இதுதான் அந்த பிரியாணியின் ஸ்பெஷலாம். பிரியாணி மட்டுமல்லாமல் 300 வகை அசைவ உணவுகள் இங்கு தினசரி தயார் செய்யப்படுகின்றனவாம். திண்டுக்கல்லில் மூன்று கிளைகளும் சென்னையில் 23 கிளைகளும் இயங்கி வருகின்றன. தற்போது கைகள் எதுவும் படாமல் காய்கறிகள் முதல் மசாலாக்கள் வரை அத்தனையும் கை படாமல் வெட்டவும் அரைக்கவும், மெஷின்களையே பயன்படுத்துகிறார்கள். இங்கு மட்டன் சுக்கா போன்ற பல உணவு வகைகள் கைகளில் படாமல் மெஷின்கள் மூலமாகவே தயார் செய்யப்படுகிறது. இதுதான் இத்தனை நாள் தலைப்பாகட்டி பிரியாணிக்குள் ஒளிந்திருந்த ரகசியம்.
- Get link
- X
- Other Apps
பிரியாணி என்று சொன்னாலே நமக்கு சட்டென நினைவுக்கு வருவது திண்டுக்கல் மற்றும் ஹைதராபாத் பிரியாணி வகையறாக்கள் தான். ஆனால் உண்மையிலேயே இந்தியாவில் மட்டும் 18 இடங்கள் பிரியாணிக்காகவே பெயர் பெற்றவை. ஆம் அப்படி எந்தெந்த ஊரில் என்னென்ன பிரியாணி ஃபேமஸ் என்று பார்க்கலாமா? ஹைதராபாத் - தம் பிரியாணி லக்னௌ - அவாதி பிரியாணி கொல்கத்தா பிரியாணி கேரளா தளச்சேரி பிரியாணி அசாம் காம்பூர் பிரியாணி சிந்து- குஜராத் மெமோனி பிரியாணி மங்களூரியன் பிரியாணி கர்நாடகா பத்கலி பிரியாணி ஆம்பூர் பிரியாணி ஹைதராபாத் தூத் கி பிரியாணி போக்ரி பிரியாணி கோலிக்கோடு பிரியாணி கல்யாணி பிரியாணி (இது ஹைதராபாத்தில் ஏழைகளின் பிரியாணி என்று அழைக்கப்படுகிறது.) திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி பியரி பிரியாணி மொஹல் தெஹ்ரி பிரியாணி காஷ்மீரி முட்டஞ்சன் பிரியாணி மும்பை பிரியாணி இந்த 18 வகை பிரியாணிகளின் பிறப்பிடமும் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல வகை பிரியாணிகள் இந்தியாவில் இருக்கின்றன. இருப்பினும் இந்த 18 வகையான பிரியாணியும் உலகப் புகழ் பெற்றவை.
- Get link
- X
- Other Apps
உலகில் இதுவரை இறந்தவர்களின் ஆவிகள் அத்தனையும் உலவும் இடம் இதுதானாம்.... உலகில் எல்லா கடவுளுக்கும் கோயில்கள் உண்டு. ஏன் உன்னை மக்கள் வழிபட மாட்டார்கள் என்று சிவனால் சாபம் வழங்கப்பட்ட பிரம்மனுக்குக் கூட ஓரிரு கோயில்கள் இருப்பதாக அறிகிறோம். ஆனால் நம்முடைய உயிரைக் குடிக்கும் கடவுளாகக் கருதப்படுகிற எம தர்மனுக்கு கோயில்கள் இருந்ததாகவோ மக்கள் வழிபட்டதாகவோ நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் பெயரைக் காதால் கேட்டாலே காத தூரம் ஓடும் எம தர்மராஜாவுக்கும் நம் நாட்டிலேயே கோயில் கட்டியிருக்கிறார்கள் தெரியுமா? ஆம். அதுவும் இந்தியாவில் தான் அப்படியொரு கோயில் இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பிரம்மூர் என்னும் இடத்தில் உள்ள சௌராஷி கோயிலுக்குள் தான் எம தர்மனுக்கும் கோயில் இருக்கிறது. இந்த பிரம்மூர் பிரம்மபுரம் என்ற பெயராலும் பரவலாக அழைக்கப்படுகிறது. சம்பாவில் இருந்து தென் கிழக்கில் 40 மைல் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இது புதில் பள்ளத்தாக்கில் இருந்து 7000 அடி உயரத்தில் உள்ளது. மதத்தின் அருமையையும் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்துவதற்காக, 84 பேர் சேர்ந்து இந்த கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். இது மாறவர்மனால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்த கோயில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எமதர்மன் மட்டுமல்லாமல், லக்ஷனா தேவி, சிவன், கணபதி, நரசிம்மர் ஆகியோருக்கும் இக்குாவிலுக்குள் பிரகாரங்கள் உண்டு. இதன் நுழைவாயிலில் தர்மேஷ்வர மஹாதேவர் வீற்றிருக்கிறார். உலகத்தில் உள்ள மொத்த வாழும் ஜீவராசிகளின் ஆவிகளும் இந்த இடத்தில் தான் அடங்குகிறது என்று நம்பப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பது அந்த ஆவிகளுக்கு மட்டுமே தெரியும்.
- Get link
- X
- Other Apps
மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல் காபாரதத்தில் கௌரவ பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ணன் திருதராஷ்டரரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமா வார்.அத்தகைய பெருமை மிக்க விதுரர் கூறிய பதினேழு வகையான மூடர்களைத்தான் கீழே பட்டியலிடப்பட்டு ள்ளது. பதினேழு வகையான மூடர்கள் 1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.. 2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன் 3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்பவன் 4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன். 5) தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன். 6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய் யாமல் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டிருப்பவன். 7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்). 8) பலமில்லாதவனாக இருந்துகொண்டு, பலமுள்ளவ னோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன் 9) பிறரிடம் இருந்து உதவியோ அல்லது பொருளை யோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன். 10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன் அதாவது பிறர் மனைவியரை அடைபவன் 11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன். 12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன். 13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன். 14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன். 15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிரு ப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன். 16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித்தற்பெருமை பேசுபவ ன். 17) எதிரிகளிடம் சரண்டைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன். ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.
- Get link
- X
- Other Apps
எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி, எலுமிச்சை என்ற பெயர் வந்ததெனக் கூறுவர். இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்..... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம். சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்..? சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம். இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன. இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். “திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்
- Get link
- X
- Other Apps
சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் ஏற்படும் ஆபத்துக்கள்: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். . #இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப்படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும். . #எச்சில் அளவை குறைக்கும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி விடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும். . #அசிடிட்டியை உண்டாக்கும் அசிடிட்டியால் அடிக்கடி ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின் மீது பழியை போடலாம். தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன் பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். . #உணவை நன்கு மென்று விழுங்கவும் உணவை அப்படியே விழுங்காதீர்கள்; நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் உள்ள மற்றொரு பயன் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது. . #30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும் உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்கவேண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்….! . சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் ஏற்படும் ஆபத்துக்கள்: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். . #இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப்படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும். சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் ஏற்படும் ஆபத்துக்கள்: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். . #இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப்படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும். . #எச்சில் அளவை குறைக்கும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி விடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும். . #அசிடிட்டியை உண்டாக்கும் அசிடிட்டியால் அடிக்கடி ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின் மீது பழியை போடலாம். தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன் பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். . #உணவை நன்கு மென்று விழுங்கவும் உணவை அப்படியே விழுங்காதீர்கள்; நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் உள்ள மற்றொரு பயன் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது. . #30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும் உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்கவேண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்….!
- Get link
- X
- Other Apps
திருமணம் என்ற சொல்லின் விளக்கம்: ============================= திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு. தாலி: ===== தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.பின்னாளில் அதனைப்பொன்னால் செய்து பொற்றாலி க்கினர். அருகு-மணை எடுத்தல்: ================== தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவர்.முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள்மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர். "அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும்.மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும். பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர். ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும். முகூர்த்தக்கால் நடுதல்: ======================== முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். அரசாணிக்கால் நடுதல்: ======================== மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும். மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்: ============================ கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும். திருமண வேள்வி: ============== அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும். பாலிகை இடுதல்: ============= நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்: ========================== இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள். அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும். சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்: ============================ மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும். வெற்றிலைபாக்கு மாற்றுதல்: ======================= மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின் மகனுக்கு என இருவிட்டாரும் கூறி ஏ ழு பாக்கு கள் ஏழு வெற்றிலைகள் வைத்து மாற்றுதல் எழுவகை பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உருதியளிப்பதாகும் . * உறவின் முறை விளக்கம்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~ * கணவன், கொழுநன் ~~~~~~~~~~~~~~~~~~ கண் அவன் பெண்ணுக்கு கண் போன்றவள் என்பதாகும் .நம்மை நல்வழிசெல்லும் கண்ணைபோல் பெண்ணை நல்வழி படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவள் கணவன் என்பதாகும் * கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும் .கோடி படர்ந்து உயர்வதற்கு கொழு கொம்பு எப்படி இன்றி அமையாததோஅதே போல் பெண்மைக்குப்து பாதுகாவளுக்குரியஆண்மகன் என்பதாகும் * மனைவி ~~~~~~~~ மனைவி துணைவி இல்லாள் இச்சொற்கள் இல்லநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனாவாகும் மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்
- Get link
- X
- Other Apps
ஆஸ்கருக்கு சென்ற தமிழ் திரைப்படங்கள் #தெய்வமகன்_1959 #நாயகன்_1984 #அஞ்சலி_1990 #தேவர்மகன்_1992 #குருதிப்புனல்1995 #இந்தியன்_1996 #ஜீன்ஸ்_1998 #ஹெராம்_2000 #விசாரணை_2016
- Get link
- X
- Other Apps
#அறிவோம் தன் காலடியைத் தரையில் வைக்காத பறவை ‘ஹரியாஸ்’ என்பதாகும். பார்க்க வயலின் மாதிரி இருப்பதால் இதனை 'வயலின் மீன்' என்று கூப்பிடுவார்கள். எதிரிகளிடம் சிக்கிக் கொண்டால், சுறுசுறு என்று கரண்ட் மாதிரி ஒரு கதிரை எதிரிகளோட உடம்பில் பாய்ச்சி விட்டு தப்பித்துவிடும். ஆண் புலியின் எடை 200 கிலோ முதல் 320 கிலோ வரை இருக்கும். சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1985. சுவிட்சர்லாந்தில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன். அரிஸ்டாட்டில் மிகச் சிறந்த தத்துவ ஞானி. கிரேக்க நாட்டவர். ப்ளேட்டோவின் மாணவர். அலெக்ஸ்சான்டரின் ஆசிரியர். அரசியல் அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். முதலையின் கண்ணில் இருந்து சில சமயம் நீர் வடியும். இதனை அழுகை – கண்ணீர் என நினைக்கிறோம். அது சரியல்ல. முதலை உணவை அப்படியே விழுங்கும். அதனை செரிக்க வைக்க வயிற்றில் ஒரு திரவம் சுரக்கும். அப்படி சுரக்கும் நீர் சற்று அதிகமாகிவிட்டால், அந்த அதிகப்படி நீர்தான் கண்வழியே வெளியேறும். நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம். முதலைக்கு மட்டும் எத்தனை முறை பல் விழுந்தாலும் மறுபடியும் முளைத்து விடும். வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்கு பற்கள் வயிற்றில் உள்ளன. 'தென்னிந்தியாவின் வெனிஸ்' என்று அழைக்கப்படுவது ஆழப்புழை நகரம்.
- Get link
- X
- Other Apps
#மனிதன்ஓர்அதிசயம்🎯 ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.🎯 மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்.🎯 மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தை களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.🎯 மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.🎯 நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.🎯 நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள்.🎯 மனிதனின் உடலிலுள்ள குரோ மோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)🎯 நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.🎯 நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.🎯 கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.
- Get link
- X
- Other Apps